News April 22, 2025
தலைவிதியை மாற்றும் விழுப்புரம் சிவன் கோயில்

விழுப்புரம் கோலியனூரில் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடப்பட்ட மிக பழமையான கோயிலாகும். இந்த ஆலயம் நரசிம்ம பல்லவரால் 5ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் பூர்வ ஜென்ம தோஷம் நீங்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News November 23, 2025
விழுப்புரம்: தனிக்குடித்தனம் சென்ற மகன்- தாய் தற்கொலை!

விழுப்புரம்: துலங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி தனலட்சுமி (55). இவர்களது மகன் சரவணன் தனிக்குடித்தனம் போகிறேன் எனக்கூறியதால் தனலட்சுமி மனமுடைந்து பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியிலேயே தனலட்சுமி உயிரிழந்துவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
News November 23, 2025
விழுப்புரம்: சப்பாத்தி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு!

விழுப்புரம்: கரடிக்குப்பத்தை சேர்ந்தவர் தவமணி மகள் பூவரசி (14). நேற்று முன்தினம் இரவு பூவரசி சப்பாத்தி, குருமா சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளார். பின்னர் நேற்று அதிகாலை 4 மணியளவில் பூவரசிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவளை பெற்றோர் சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே பூவரசி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 23, 2025
விற்பனைக்காக வலி நிவாரணி (போதை) மாத்திரைகள் வைத்திருந்தவர் கைது

தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலமேடு பொன்னியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை சோதனை செய்ததில் விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவர அவரது பெயர் ஜெய்கணேஷ் என தெரிய வந்தது தாலுகா போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ந்து தாலுகா போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்


