News September 13, 2024
தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றுபவர் கார்த்திக். இவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது, திறந்திருந்த பேக்கரியை உரிமையாளரிடம் மூடச் சொல்லி இருக்கிறார். ஆனால் கடையின் உரிமையாளர் வியாபாரம் செய்து கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்த கார்த்திக் கடை ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால், கார்த்திக்கை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து திருச்சி எஸ்பி உத்தரவிட்டுள்ளார். SHAREIT
Similar News
News November 8, 2025
திருச்சி: தேர்வு இல்லாமல் வங்கி வேலை!

திருச்சி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <
News November 8, 2025
நவல்பட்டு: பெரிய சூரியூரில் கபடி போட்டி அறிவிப்பு

திருச்சி மாவட்டம், நவல்பட்டு அடுத்த பெரிய சூரியூர் கிராமத்தில், ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர் பேரவை சார்பில் நடத்தப்படும் முதலாம் ஆண்டு கபடி திருவிழா வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் முதல் பரிசாக ₹.1 லட்சம், 2-ம் பரிசாக ₹.70,000, 3-ம் பரிசாக ₹.50,000, 4-ம் பரிசாக ₹.50,000 வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 73733 84540, 86754 90655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இன்று ஊஞ்சல் உற்சவம்!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்களுக்கு நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு நிகழ்வானது இன்று நவ.8ஆம் தேதி தொடங்கி, வருகிற 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மாலை 5 மணி அளவில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின், இரவு 7.15 க்கு ஊஞ்சல் உறசவம் நடைபெறும்.


