News August 6, 2025

தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

image

பள்ளிப்பாளையம் அருகே, வெடியரசம்பாளையம் பகுதியில் 2022ல் வயதான தம்பதியை கட்டிப்போட்டு 30 லட்சம் ரூபாயை சிலர் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கோபாலகிருஷ்ணன் ஜாமினில் வெளியே வந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இவர் கமுதி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பள்ளிப்பாளையம் போலீசார், கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

Similar News

News December 11, 2025

நாமக்கல்லில் மாபெரும் மருத்துவ முகாம்!

image

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம், வரும் (13.12.2025) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு, இலவச முழு உடற் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை பெறலாம்.

News December 11, 2025

நாமக்கல்: உங்கள் பகுதியில் ரோடு சரியில்லையா?

image

நாமக்கல் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<> “நம்ம சாலை” <<>>செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 11, 2025

நாமக்கல்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!