News April 27, 2024
தலைக்கவசம் அணிந்து செல்ல டிஎஸ்பி அறிவுறுத்தல்
இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும் நாகை மாவட்டத்தை பொருத்தவரை பலர் அதனை காற்றில் பறக்க விட்டு தலைக்கவசம் அணியாமல் சென்று வருகின்றனர். தற்பொழுது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என டிஎஸ்பி பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News November 20, 2024
நாகை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
நாகையில் கனமழை பெய்து வருவதை தொடர்ந்து விடுமுறை குறித்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவெடுத்துக்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷிணி அறிவித்துள்ளார். ஆட்சியரின் அறிவுரையை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 20, 2024
திருமருகலில் பாம்பு கடித்து முதியவர் பலி
திருமருகலை சேர்ந்தவர் உத்திராபதி (80). இவர் நேற்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கையில் பாம்பு கடித்துள்ளது. இதில் உத்திராபதி வலியில் கத்தியுள்ளார். உடன் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து திட்டச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 20, 2024
நாகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
நாகை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 10-ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த வேலைவாய்ப்பற்ற ஆண் மற்றும் பெண்கள் பங்கேற்று பயன் பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார். SHARE IT