News March 24, 2025
தற்காலிக கடைகளில் ஆய்வு நடத்த கோரிக்கை

ராமநாதபுரத்தில் கோடை வெயிலால் அடிக்கடி நீராதாரங்களை மக்கள் தேடும் நிலையில் சாலையோரங்களில் தற்காலிகமாக தண்ணீர் பழம், கரும்புச்சாறு, இளநீர், சர்பத் கடைகள் தோற்றியுள்ளன. திறந்தவெளியில் இவை விற்பனை செய்யப்படுவதால் மணல் துகள்கள்,துாசிகள் படிவது,அதிகளவில் செயற்கை வண்ணங்கள் சேர்க்கும் நிலையும் உள்ளது. எனவே உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இதில் ஆய்வு செய்து தரமான குளிர்பானங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
Similar News
News November 23, 2025
ராமநாதபுரம்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

ராமநாதபுரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <
News November 23, 2025
இராம்நாடு: இலவச வீடு பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் குதக்கோட்டை ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவ படத்தில் 100 வீடுகள் வழங்க 100 பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். எனவே தகுதியானவர்கள், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் குதக்கோட்டை ஊராட்சியில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என இராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News November 23, 2025
ராமநாதபுரம்: சமையல்காரர் அடித்து கொலை

பாம்பன் அன்னை நகரை சேர்ந்தவர் அன்சாரி, 65; சமையல்காரர். இவரது வீட்டருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் ‘குடி’மகன்கள் போதையில் அன்சாரி வீட்டருகே மது அருந்திவிட்டு, அங்கேயே காலி பாட்டிலை வீசி உள்ளனர். அன்சாரி, அவர்களை கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டருகே அங்கு வந்த போதை ஆசாமிகள் சிலர், அன்சாரியை கட்டையால் அடித்து கொலை செய்தனர். போலீசார், கொலையாளிகளை தேடுகின்றனர்.


