News April 22, 2025

தற்காப்பு கலை பயிற்சியில் மாணவர்கள் சேரலாம் – ஆட்சியர்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்; குமரி மாவட்டத்தில் ஸ்டார் விளையாட்டு பயிற்சி மையத்தின் கீழ் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12 வயது முதல் 21 வயது வரை உள்ள மாணவ,மாணவிகள் இருபாலரும் சேரலாம். இதற்கான உடற்பகுதி தேர்வு 28ஆம் தேதி காலை அண்ணாமலையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது என்று அதில் அவர் கூறியுள்ளார். *ஷேர் பண்ணுங்க

Similar News

News April 22, 2025

நாகர்கோவிலில் கோடைகால பயிற்சி முகாம் – ஆட்சியர்

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று (ஏப்.22) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குமரி மாவட்டத்தில் கோடைகால பயிற்சி முகாம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் இம்மாதம் 25ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை 21 நாட்கள் நடைபெற உள்ளது. தடகளம், கால்பந்து, கைப்பந்து, வாள் சண்டை மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 18 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம்.

News April 22, 2025

பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 பேர் அதிரடி கைது

image

மார்த்தாண்டம் அருகே உள்ள நவுரிகாட்டு விளையில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடந்து வருவதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு இன்று (ஏப்.22) தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து நடத்திய அதிரடி சோதனையில் ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக முகேஷ் (47) என்பவர் சிக்கினார். மேலும்,இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 22, 2025

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு 

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25ம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் பிற அரசு துறைகளில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கை மனுக்களை மீனவர்கள் முகாமின் போது நேரில் வழங்கலாம் என்று அதில் கூறியுள்ளார்.

error: Content is protected !!