News April 9, 2025
தர்மபுரி தொங்கும் தூண் பற்றி தெரியுமா?

தர்மபுரியில் மிகவும் பிரிசித்தி பெற்ற கல்யாண காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அழகிய சிற்பங்களுடன் காணப்படும், தூணின் அடியில் ஒரு காகிதத்தை விட்டால் மறுப்பக்கம் வந்துவிடும். 2000 கிலோ எடை கொண்ட இந்த தூண் அந்தரத்தில் தொங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொங்கும் தூண் என அழைக்கப்படுகிறது. இது தமிழரின் கட்டடக்கலைக்கு ஒரு சோறு பதம் ஆகும். *இது பற்றி தெரியாத நண்பர்களுக்கு பகிரவும்*
Similar News
News October 28, 2025
இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம்

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (23.07.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், புவனேஸ்வரி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் , தோப்பூரில் குமரவேல் , மதிகோன்பாளையத்தில் செல்வம் மற்றும் கிருஷ்ணாபுரத்தில் ராஜு ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.
News October 27, 2025
தீயணைப்பு வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய ஆட்சியர்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இன்று (அக்.27) தி.அம்மாபேட்டை தென்பெண்னை ஆற்றில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட மாணவர்களை காப்பாற்றிய தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் சதீஸ் வழங்கினார். உடன் நர்மதா, மாவட்ட தீயணைப்புதுறை அலுவலர் செல்வி அம்பிகா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
News October 27, 2025
மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகளுக்கு ஆட்சியர் வாழ்த்து

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் சதீஸ், இன்று (அக்.27) மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகள் ஆட்சியர் சதிஷ்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


