News August 2, 2024

தர்மபுரியில் புதிய 10 பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்

image

தர்மபுரி பேருந்து நிலையத்தில் புதிய வழித்தடத்திற்கு 10 அரசு பேருந்துகளை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைத்தார். இதில் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி ஐ வெங்கடேஸ்வரன், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, நகர செயலாளர் லட்சுமி நாட்டான் மாது, மற்றும் துறை சார் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 17, 2025

தர்மபுரியில் 3 நாட்களுக்கு குடிநீர் தடை

image

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னா கரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 பஞ்சாயத்துகள், காரிமங்கலம் 26, பாலக்கோடு 32 மற்றும் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், மாரண்ட ஹள்ளி ஆகிய பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வருகின்ற 18, 19, 20 ஆகிய தேதிகளில் பராமரிப்பு பணி காரணமாக குடிநீர் வழங்க இயலாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 17, 2025

தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.16) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சிவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன் , தோப்பூரில் ஜீலான்பாஷா , மதிகோன்பாளையத்தில் முத்து மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

News November 16, 2025

தருமபுரி: டாஸ்மாக் கடையில் மயங்கி உயிரிழப்பு!

image

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பேருந்து நிலையம் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே ஒலபட்டி பகுதியை சேர்ந்த மாதையன் (65), மதுபோதையில் மயங்கி கிடந்தவரை பொதுமக்கள் புகாரில். கம்பைநல்லூர் போலிஸார் நேற்று மீட்டு, தருமபுரி GH-க்கு கொண்டு சென்றதில், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!