News August 16, 2024
தர்மபுரியில் பரவும் வதந்தி SHARE பண்ணுங்க!

தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்த பெண்களுக்கான உரிமை தொகை விண்ணப்பிக்கும் முகாம் மூன்று தினங்கள் நடைபெறுவதாக செய்தி ஒன்று பரவி வருகிறது. இந்த செய்தியை சரி பார்த்ததில் இது உண்மைக்கு மாறான செய்தி என தெரிய வந்துள்ளது. இதனை நமது தளத்திலும் பதிவிட்டுள்ளோம். செய்தி உண்மைக்கு மாறானது என தெரிந்தவுடன் அதனை நீக்கிவிட்டோம். இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம். அனைவருக்கும் SHARE செய்யவும்.
Similar News
News December 6, 2025
தருமபுரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) தருமபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News December 6, 2025
தருமபுரி:லஞ்சம் வாங்கிய அரசு வழக்கறிஞர் கைது!

பையர்நத்தத்தை சேர்ந்த செந்தில் தனது பெண் குழந்தைக்கு நடந்த பாலியல் குற்றம் குறித்த போக்சோ வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் குழந்தை சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர் கல்பனா வழக்கை நடத்த ரூ.15000 லஞ்சமாக கேட்டுள்ளார்.லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தந்த இரசாயனம் தடவிய பணத்தை நேற்று மாலை செந்திலிடம் இருந்து கல்பனா பெரும் போது காவலர்கள் அவரை கைது செய்தனர்.
News December 6, 2025
தருமபுரி: பெண்களே.. சொந்த காலில் நிக்கணுமா?

ஹோட்டல் அல்லது கேட்டரிங் தொழிலை தொடங்க நினைக்கும் பெண்களுக்காக, மத்திய அரசு ‘பிரதம மந்திரி அன்னபூர்ணா யோஜனா’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் பயன்பெற விரும்பும் பெண்கள் அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 2 நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் ரூ.50,000 வந்துவிடும். இதனை 3 ஆண்டுகளுக்குள் திரும்பி செலுத்தினால் போதும். உடனே ஷேர் பண்ணுங்க!


