News August 7, 2024
தர்மபுரியில் நெசவாளர்களுக்கான கையேடு வெளியீடு

10ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் லலிகம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் கைத்தறி துறையால் நெசவாளர்களுக்கான செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் தொடர்பான கையேடுகளை மாவட்ட ஆட்சியார் சாந்தி இன்று வெளியிட்டார். இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள், கூட்டுறவு நெசவாளர் சங்கத்தினர் மற்றும் நெசவாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Similar News
News October 16, 2025
தருமபுரி: ஒரு புகாருக்கு ரூ.1,000-மிஸ் பண்ணாதீங்க!

தருமபுரி மக்களே, நெடுஞ்சாலையில் நாம் உபயோகிக்கும் கழிவறைகள் பெரும்பாலும் முகம் சுளிக்க வைக்கும் வகையில்தான் உள்ளது. இதைத் தடுக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லையெனில், அதனை புகைப்படம் எடுத்து, <
News October 16, 2025
தருமபுரி: கடை உரிமையாளர்களுக்கு பறந்த உத்தரவு!

தருமபுரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கடை உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு தரமான உணவுப்பொருட்களை விற்பனை செய்யுமாறும், உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்று இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ் உத்தரவிட்டுள்ளார். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News October 16, 2025
தருமபுரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் நேற்று (அக்.15) வெளியிட்ட செய்தி குறிப்பில், ’வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை உள்ளிட்ட துறைகளில் ஸ்டார்ட் அப் தொழில் தொடங்குவோருக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். பயனாளிகள் தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தாக்க இயக்கம் அல்லது ஸ்டார்ட் அப் இந்தியா கீழ் பதிவு செய்திருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.