News August 10, 2024
தர்மபுரியில் சுயவேலைவாய்ப்பு பயிற்சி

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அரசு சான்றிதழுடன் கூடிய தொழில்முனைவோருக்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு; 04343 230511, 8667679474, 9442274912 என்ற எண்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என நிறுவனர் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 22, 2025
தர்மபுரி: சக்கரத்தில் தலை நசுங்கி கொடூர பலி!

பொன்னாகரம் அருகே பூசிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி சித்ரா(43). கணவன், மனைவி இருவரும் நேற்று(டிச.21) பைக்கில் தர்மபுரி நோக்கி சென்றனர். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சித்ரா, தனியார் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி கொடூரமாக பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 22, 2025
தர்மபுரியில் இளம்பெண் தற்கொலை!

கிருஷ்ணாபுரம் அருகே உள்ள புது குடியான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தமூர்த்தி. இவருடைய மனைவி ரேவதி(22). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், ரேவடி வீட்டின் ஓர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 21, 2025
தருமபுரி வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்!

தருமபுரி மாவட்ட பொதுமக்களுக்கு அறிய வாய்ப்பு, SIR திட்டத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களுக்காக, புதிய வாக்காளர்கள் சேர்தல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் வரும் டிச.27 (சனி), டிச.28 (ஞாயிறு) மற்றும் ஜன.03 (சனி), ஜன.04 (ஞாயிறு) ஆகிய 4 நாட்களில் நடைபெறுகிறது. மேலும்,வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, மாறுதல் செய்ய அணுகலாம்.


