News September 14, 2024
தர்மபுரியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம்

தர்மபுரி அருகே கிட்டம்பட்டி தண்டாவில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் நேற்று மாவட்ட கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு செய்தார். அப்போது அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலின்படி பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்காத சத்துணவு அமைப்பாளர் மஞ்சுளாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். உடன் பிடிஓ சந்தியா கலைவாணி மற்றும் துறை அலுவலர்கள் இருந்தனர்.
Similar News
News December 5, 2025
தருமபுரியில் 30,000 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

தருமபுரி – பென்னாகரம் பிரதான சாலையில் நேற்று சந்தேகத்துக்கிடமான வகையில் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதை போலீஸாா் சோதனை செய்ததில், 600 முட்டைகளில் 30,000 கிலோ (30 டன்) ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரி மற்றும் அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, ரேஷன் அரிசியை கடத்திச்செல்ல முயன்ற தருமபுரி மாவட்டம், சாமிசெட்டிப்பட்டியைச் சோ்ந்த ரா.ஆனந்தகுமாரை கைது செய்தனா்.
News December 5, 2025
தருமபுரி: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (டிச.05) காலை வரை, ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சிவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன் , தோப்பூரில் ராமகிருஷ்ணன் , மதிகோன்பாளையத்தில் நாகராஜ் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்!