News August 7, 2024
தர்மபுரியில் இரவு 10 மணிவரை மழை

தமிழகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 25 மாவட்டத்தில் இன்று இரவு10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ளது. கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 4, 2025
தருமபுரியில் 8 பவுன் நகையை மீட்ட காவலர்!

சேலத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி நாகர்கோவிலில் இருந்து சேலம் – மும்பை ரயிலில் சேலத்துக்கு வந்தார், செவ்வாய்க்கிழமை சேலம் வந்ததும் தமிழ்ச்செல்வி ரயிலைவிட்டு இறங்கியுள்ளார். அப்போது ரயிலில் 8 பவுன் நகை & 3000 பணப்பையை ரயிலில் தவற விட்டுள்ளார். பின், சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில், தருமபுரி உதவி ஆய்வாளர் ரமேஷ், நகை & பணத்தை மீட்டு நேற்று (டிச.3) தமிழ்செல்வியிடம் ஒப்படைத்தார்.
News December 4, 2025
தருமபுரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 4, 2025
தருமபுரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


