News October 24, 2024
தர்மபுரியில் இன்று அமைச்சர்கள் சுற்றுப்பயணம்

தர்மபுரியில் இன்று காலை 9.30 க்கு தர்மபுரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆய்வு மற்றும் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, மாவட்ட விவசாயிகள் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், காலை 11.30 க்கு பென்னாகரம் புதிய பேருந்து நிலையம் திறந்து வைத்தல், மதியம் 1.30க்கு அரூர், மாரண்டஹள்ளி பேருந்து நிலையங்களை திறந்து வைத்தல் போன்ற நிகழ்வுகளில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொள்ளவிருக்கிறார்.
Similar News
News December 18, 2025
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (டிச.20) சனிக்கிழமை அன்று சோகத்தூர் தொன் போஸ்கோ கல்லூரியில் நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை, ஐடிஐ, டிப்ளமோ முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள வாயிலாக பதிவு செய்யவேண்டும் என ஆட்சியர் சதிஷ் தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
தருமபுரி: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

தருமபுரி மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் நேரடியாக எங்கும் அலைய வேண்டியதில்லை. <
News December 18, 2025
தர்மபுரி:தமிழ் மொழி குறித்த கருத்தரங்கு விழிப்புணர்வு பேரணி!

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்ட விழா மார்கழி 2 ம் தேதி முதல் 11 தேதி வரை தமிழகம் முழுவதும் தமிழ் மொழி குறித்த கருத்தரங்கு விழிப்புணர்வு பேரணி மூலம் பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இன்று (டிச.18) காலை 11 மணியளவில் தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சதீஷ் தொடக்கி வைத்தார்.


