News April 2, 2025
தர்மபுரியில் அடுத்த மாதம் ஜல்லிக்கட்டு?

வீரத்தமிழன் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் பகுதியில் 20.5.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அழைப்பிதழ்கள் வெளியாகி உள்ளது. தர்மபுரியில் ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு பணிகள் முடிந்து ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி குறிப்பிடப்படாமல் ஒரு பிரிவு ஜல்லிக்கட்டு தொடங்காமல் நிலுவையில் உள்ளது.
Similar News
News December 10, 2025
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் தூய்மை இயக்கம்

தருமபுரி மருத்துவ கல்லுாரி மருத்துவமணையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் தூய்மை இயக்கம் 4.0 பணி தொடங்கப்பட்டது. இதில் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான உறுதிமொழியை ஆட்சியர் ரெ.சதீஸ் தலைமையில் இன்று (டிச.10) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
News December 10, 2025
தர்மபுரி:மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (டிச.10)-ம் தேதி காலை 10.00 மணி முதல் 2 மணி வரை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. பொதுமக்களால் வழங்கப்பட்ட 73 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 73 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும் புதிதாக 53 மனுக்கள் பெறப்பட்டனர்.
News December 10, 2025
தருமபுரி:64-வது தேசிய மருந்தியல் வார விழிப்புணர்வு

தருமபுரி பழைய ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நல்லம்பள்ளி தனியார் கல்லூரி சார்பில் 64-வது தேசிய மருந்தியல் வார விழிப்புணர்வு பேரணி இன்று (டிச.10) நடைபெற்றது. இந்நிகழ்வை ஆட்சியர் ரெ. சதீஸ் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பொதுமக்களுக்கு மருந்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.


