News January 23, 2025
தர்மபுரியில் அடுத்த மாதம் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு

தடங்கம் கிராமத்தில் கடந்த 22 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி பெறவில்லை என மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு அனுமதி குறித்து தாபா சிவா மாவட்ட ஆட்சியரை சந்தித்தார். தாபா சிவா பேசும்போது ”மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று பிப்.மாத தொடக்கத்தில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News November 21, 2025
தர்மபுரி: தென்கிழக்கு ரயில்வேயில் 1785 காலியிடங்கள்!

தர்மபுரி மாவட்ட மக்களே..,தென்கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள 1785 அப்ரண்டிஸ் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. தனியாக தேர்வு எதுவும் எழுதத் தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க டிச.17ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News November 21, 2025
தர்மபுரி: வயிற்று வலியால் தற்கொலை!

தர்மபுரி: பஞ்சம்பள்ளி அருகே உள்ள சூடனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்(55). விவசாயியான இவர் கடந்த நில ஆண்டுகளாக கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று முந்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பஞ்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 21, 2025
தர்மபுரி: விபத்தில் துடிதுடித்து பலி!

தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் நேற்று(நவ.20) மஞ்சவாடி கணவாயில் சுமார் 7:00 மணியளவில் லாரி கவிழ்ந்ததில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதை அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார், சம்பவம் இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


