News May 7, 2025
தர்மபுரியில் அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க!

தர்மபுரி மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News November 27, 2025
தர்மபுரியில் ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

தர்மபுரி மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)
News November 27, 2025
தர்மபுரியில் துணை முதலமைச்சர் பிறந்தநாள் விழா

அரூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் இன்று(நவ.27)
1. காலை 10.00 – ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கொக்கரப்பட்டி.
2. மதியம் 12.30 – ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கீரைப்பட்டி,
3. மதியம் 2.00 –
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வேப்பம்பட்டி
4.மதியம் 2.30 –
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாம்பாடி
என நடைபெறுகின்றன.
News November 27, 2025
தர்மபுரியில் இது நடக்குமா..?

தர்மபுரி – பெங்களூரு புறவழிச் சாலையில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்தச் சாலையில் செல்லும் பஸ்களில் வருபவர்கல் எளிதாக வந்து செல்ல தடங்கம் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை உள்ள இணைப்பு தார்சாலை, கலெக்டர் அலுவலக பின்புறம் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையை விரிவுப்படுத்த அப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. இது விரைவில் நடக்குமா? என எதிர்பார்க்கப்படுகிறது.


