News May 7, 2025

தர்பூசணி பழத்தில் கலப்படம் இல்லை – தோட்டக்கலைத்துறை

image

தர்பூசணி பழங்களில் கலப்படம் செய்யப்படுவதாக உண்மைக்கு முரணான செய்தி பரவியது. இதையடுத்து தர்பூசணி அதிகம் விளையும் மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து ரசாயன ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தர்பூசணி பழத்தில் சுவைக்காக செயற்கை ரசாயனம் கலப்படம் இல்லை என தெரிய வந்துள்ளது. எனவே மக்கள் தயக்கமின்றி தர்பூசணி பழங்களை சாப்பிடலாம். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Similar News

News November 21, 2025

ராம்நாடு: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

ராம்நாடு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே<> க்ளிக் <<>>செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 21, 2025

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

வங்கக்கடலில் நாளை (நவ. 22) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது அடுத்த 48 மணிநேரத்தில் வலுப்பெற உள்ளதால் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நாளை (நவ. 22) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்கால பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 21, 2025

ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதி

image

வங்க கடலில் காற்றின் வேகம் குறைந்துள்ளதால் ராமேஸ்வரம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடிக்க வேண்டும். மீனவர் அடையாள அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!