News December 31, 2024
தர்பூசணியில் திருவள்ளுவரை சிலை

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காய்கறி சிற்பக் கலைஞரான இழஞ்செழியன் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா பெருமையைச் சேர்க்கும் விதமாக தர்பூசணியில் திருவள்ளுவரின் திருவுருவைச் செதுக்கி அதில் வள்ளுவம் போற்றுவோம் என வாசகத்தினை எழுதியுள்ளார். இந்த காய்கனி சிற்பம் பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.
Similar News
News October 17, 2025
தேனியில் 22 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

கம்பம் வடக்கு போலீசார் நேற்று (அக்.16) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கே.கே.பட்டி சாலையில் உள்ள குளத்துக்கரை அருகே சந்தேகத்திற்கு இடமாக சாக்கு பையுடன் நின்று இருந்த பொன்னாசியன், செல்வராஜ் ஆகியோரை சோதனை செய்த பொழுது அவர்கள் 22.070 கிலோ கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
News October 17, 2025
தேனி: வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

தேனி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 17, 2025
தேனி: மனைவியை துன்புறுத்தி கொலை மிரட்டல்

போடி, மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் நிஷாந்தி (24). இவா் துரைராஜபுரத்தை சோ்ந்த ரமேஷ்ராஜா (33) என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இந்நிலையில் ரமேஷ்ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் நிஷாந்தியிடம் 10 பவுன் நகைகள் வாங்கி வரச் சொல்லி அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து போடி மகளிர் போலீசார் ரமேஷ்ராஜா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு (அக்.16) பதிவு.