News May 4, 2024

தருமபுரி: விதிமீறிய 30 வாகனங்களுக்கு அபராதம்!

image

தருமபுரி நான்கு ரோடு பழைய தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து போக்குவரத்து காவலர்கள் நேற்று(மே 3) தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஸ்டேட் வங்கி முன்பு போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 30 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Similar News

News December 14, 2025

தருமபுரி: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

image

தருமபுரி மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.32,020 – ரூ.96,200 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே பதிவு செய்து உங்கள் வேலையை உறுதி செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!

News December 14, 2025

தருமபுரி: பெற்ற மகளை பொய் சாட்சியாக்கிய ஆசிரியர்!

image

தருமபுரியை சேர்ந்த அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சரவணன் (45). இவரது மகள் 10ம் வகுப்பு படிக்கிறார். சரவணன், ஜூன்-16ல், தன் நண்பர்கள் இருவர், மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். பின் நீதிமன்றத்தில் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், நண்பர்களை பழி வாங்க, தன் தந்தை சரவணன் பொய் புகார் கொடுத்ததாக கூறினார். இதையடுத்து, சரவணனை போக்சோவில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

News December 14, 2025

தருமபுரி: கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

image

காரிமங்கலம் அருகே கொட்டுமாரன அள்ளி அடுத்த பெரியானஅள்ளி – பாலக்கோடு சாலையில், நேற்று (டிச.13) 2 சக்கர வாகனத்தில் கொட்டுமாரனஅள்ளி கிராமத்தை சேர்ந்த கௌதம் (25) என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த கார் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கௌதம் உயிரிழந்தார். பின் தகவல் அறிந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி ஜிஹெச்க்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!