News April 8, 2025

தருமபுரி மாவட்ட குறைத்தீர் கூட்டம் நிறைவு

image

தருமபுரி மாவட்டத்தில் (07/04/25) இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை எடுத்துரைத்து மனு வழங்கினர். இதில், பொதுமக்கள் இலவச பட்டா, இலவச வீட்டு மனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற 808 மனுக்களை வழங்கியுள்ளனர். இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தி உள்ளார்.

Similar News

News October 24, 2025

தருமபுரி: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

image

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <>இங்கே கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News October 24, 2025

தருமபுரி: 9 ஆண்டுகளுக்கு பிறகு கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

தருமபுரி: வீரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தனபால் (58). முன்னாள் ராணுவ வீரரான இவரை, நிலத்தகராறில், 2016ல் இவரது அண்ணன் மகன்களான சேகர் மற்றும் ஸ்ரீதர் இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தனபால் கொடுத்த புகாரின் பெயரில் இருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் தற்போது தருமபுரி நீதிமன்றம் 2 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.3000 அபராதம் விதித்துள்ளது.

News October 24, 2025

மழைபொழிவில் 2ம் இடம் பிடித்த தருமபுரி

image

வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அரக்கோணத்தில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தருமபுரி அரூரில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், மோகனூர், நாமக்கல், நீலகிரி, திருப்பூரில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் வரும் 27 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!