News April 5, 2025
தருமபுரி மாவட்டத்தில் 114 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 05 அங்கன்வாடி பணியாளர், 20 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 89 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News April 12, 2025
இந்திய கடற்படையில் +2 முடித்தவர்களுக்கு வேலை

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த <
News April 12, 2025
கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு

நல்லகுட்லஅள்ளி பெரியண்ணன் தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச நேற்று சென்ற போது பாம்பை கண்டு பயந்து கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், சிகிச்சை பெற்ற பெரியண்ணன் உயிரிழந்தார். இது குறித்து கடத்தூர் காவலர்கள் வழக்குப்பதிவிட்டு விசாரித்து வருகின்றனர்.
News April 12, 2025
பெண்கள் மட்டும் வடம்பிடித்து இழுக்கும் திருத்தேரோட்டம்

தர்மபுரி மாவட்டம், அன்னசாகரம் பகுதியில் வீற்றிருக்கும் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சிவசுப்பிரமணிய சுவாமியின் திருத்தேரினை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுக்கும், சிறப்பு விழா வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனின் அருள் பெற்றனர்.