News April 4, 2025
தருமபுரி மாவட்டத்தில் மழை வெளுக்கும்

தருமபுரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று, காரிமங்கலம், பென்னாகரம், இண்டூர், தீர்த்தமலை போன்ற பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாளை (ஏப்ரல்.5) தருமபுரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 10, 2025
தருமபுரியில் கரண்ட் கட்!

பொம்மிடி, வே.முத்தம்பட்டி, கே.என்.புதூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (நவ.11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசிக்கவுண்டனூர், பொ.துரிஞ்சிபட்டி, நடூர், ஒட்டுபட்டி, பில்பருத்தி, ஆகிய சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News November 10, 2025
தருமபுரியில் இன்றே கடைசி-2,708 காலியிடங்கள்!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று நவ.10. 5) விண்ணப்பிக்க: <
News November 10, 2025
தருமபுரியில் 1,027 பேர் ஆப்சென்ட்!

தருமபுரி மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வு மையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு நேற்று (நவ.9) நடைபெற்றது. இதில் மொத்தம் 9,559 பேர் தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. இதில், 8,538 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்ததாகவும், 1,027 பேர் ஆப்சென்ட் ஆனதாகவும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


