News August 17, 2024

தருமபுரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

Similar News

News October 31, 2025

தர்மபுரி: 48 மணிநேரத்தில் இழந்த பணத்தை மீட்கலாம்!

image

ஆன்லைன் பொருட்கள் விற்பனை, பகுதிநேர வேலை எனப் பல வழிகளில் ஆன்லைன் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்கள் பணத்தை இழந்தவுடன், உங்கள் பணம் மோசடியாளர் கணக்கிற்கு சென்றுவிடும். ஆனால் வங்கிகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைக்கு 48 மணிநேரம் ஆகும். எனவே, தருமபுரியில் உள்ள மக்களுக்கு இப்படி நடந்தால் 1930 என்ற எண்ணிலோ (அ) இந்த <>லிங்க் <<>>மூலமாகவோ புகார் அளித்து, வங்கிக்கு தகவல் அளித்தால், பணத்தை விரைவாக மீட்கலாம். ஷேர் பண்ணுங்க!

News October 31, 2025

தருமபுரி: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 31, 2025

தருமபுரி: விபத்தில் ஒருவர் சம்பவ இடத்துலயே பலி

image

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் நேற்று (அக். 30) இரவு சுமார் 8 மணியளவில், தொப்பூரை நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது நான்கு சக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!