News March 20, 2024

தருமபுரி: திமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகம்

image

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து திமுக தருமபுரி நாடாளுமன்ற வேட்பாளராக அ.மணி களமிறங்குவதாக இன்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். இதை தொடர்ந்து, தருமபுரி திமுக தலைமை அலுவலகத்தில் நகர செயலாளர் நாட்டான் மாது தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்நிகழ்வில் நகர நிர்வாகிகள், மற்றும் திமுகவினர் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Similar News

News December 4, 2025

தருமபுரி: மின்சாரம் தாக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

image

தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே தாளப்பள்ளத்தில் உள்ள காகித ஆலையின் திறப்பு விழாவில் சுவிட்ச் பெட்டிக்கு அலங்காரம் செய்தபோது பாஞ்சாலை (52) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேலும், மாரண்டஅள்ளி அருகே மோட்டார் சுவிட்சை இயக்க முயன்றபோது நாராயணன் (37) என்பவரும் மின்சாரம் தாக்கி பலியானார். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் தனித்தனியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 4, 2025

தருமபுரி: கல்லூரி மாணவர் மருந்து குடித்து தற்கொலை!

image

காரிமங்கலம் அருகே வலைய கார பள்ளம் கிராமத்தில் கல்லூரி மாணவர் ஜீவா (18) முள்ளங்கி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். தகவலறிந்த உறவினர்கள் அவரை மீட்டு காரிமங்கலம் ஜி.ஹெச்-சுக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவரைப் பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதை தொடர்ந்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.

News December 4, 2025

தர்மபுரி காவல்துறை இரவு ரோந்து விபரம் வெளியீடு!

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (டிசம்பர்-3) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

error: Content is protected !!