News June 25, 2024
தருமபுரி எம்.பி.மணி பதவியேற்பு

தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மணி இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மணி, தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
Similar News
News December 12, 2025
தருமபுரி மாவட்டத்திற்கு முதலிடம்!

தருமபுரி மாவட்டம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான சிறந்த செயல்திறன் விருதுகளை சென்னை ஓமந்தூராரில், இன்று (டிச.12) சுகாதார அமைச்சரிடமிருந்து பெற்றுள்ளது. 95:95:95 என்ற இலக்கை அடைந்ததில், எச்ஐவி எய்ட்ஸ் கட்டுப்பாட்டில் தருமபுரி முதலிடம் பிடித்துள்ளது. மேலும் கூடூ தொண்டு நிறுவனம் – தருமபுரி, தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், இணைப்புப் பணியாளர்கள் திட்டத்திலும் முதலிடம் பெற்றுள்ளனர்.
News December 12, 2025
தருமபுரி: டூவீலர், ஆட்டோ வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்கு ரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <
News December 12, 2025
தருமபுரி: பெண்ணை கேலி செய்ததால் கழுத்தறுத்து கொலை!

தருமபுரி, ஒகேனக்கல் அருகே, கடந்த டிச.7 பெண்ணை கேலி செய்ததாக கூறி, கிருஷ்ணகிரியை சேர்ந்த தேங்காய் வியாபாரி ருத்ராட்ச ராவ்(35) என்பவரை, அப்பெண்ணின் உறவினர்கள் கழுத்தை அறுத்து கொன்று, காவிரியாற்றில் வீசி உள்ளனர். பின் அவரது சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வந்த நிலையில்,நேற்று (டிச.11) முருகேசன்(49) நாகராஜ்(45) மூர்த்தி(35) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


