News August 24, 2024
தருமபுரி ஆட்சியர் ஆய்வு

தருமபுரி நகராட்சி சார்பாக அழகாபுரியில் உள்ள நகர்ப்புற வீடு அற்றவர்களுக்கான தங்கும் விடுதியினை மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அவர்களுக்கான உணவு மற்றும் தங்கும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இதில் நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, நகர நல அலுவலர் தாமரைக்கண்ணன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 8, 2025
தருமபுரி: குஸ்கா சாப்பிட்ட கூலி தொழிலாளி சாவு!

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த செல்லம்பட்டி சேர்ந்த வெங்கடாசலம் (58) வெல்டிங் தொழிலாளி. இவர் கடையில் மது குடித்துவிட்டு குஸ்கா சாப்பிட்ட மயங்கி விழுந்தார். பின்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்க பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து நேற்று (டிச-7) மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News December 8, 2025
தருமபுரியில் பதறவைக்கும் கோர விபத்து!

தருமபுரி மாவட்டம், புலிக்கரை அருகே அள்ளியூர் தேசிய நெடுஞ்சாலை அருகில், நேற்று (டிச.07) அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் லாரி மோதி சம்பவிடத்திலேயே உயிரிழந்தார். இவர் பெங்களூரில் இருந்து தருமபுரி நோக்கி வந்து கொண்டிருந்தபோது தண்டவாளம் ஏற்றி வந்த லாரியை முந்திசெல்ல முயன்றதால், நிலைதடுமாறி லாரியில் மோதி இறந்துள்ளார். மேலும், இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 8, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (டிச.08) காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சதிஷ்குமார் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் , தோப்பூரில் குமரவேல் , மதிகோன்பாளையத்தில் செல்வம் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்!


