News August 26, 2024
தருமபுரி அருகே வாகனம் மோதி முதியவர் பலி

காரிமங்கலம் அருகே முள்ளனூர் சாலையில் இன்று பந்தார அள்ளியை சேர்ந்த மாரியப்பன்(65) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த காரியமங்கலம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
தருமபுரி: விபத்தில் உயிரிழந்தவருக்கு MLA ஆறுதல்!

தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், நடந்த விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தவர்களின் உடல்களை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதை, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், இன்று (டிச.16) நேரில் சென்று, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியனார். உடன் அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இருந்தனர்.
News December 16, 2025
தருமபுரி: போட்டித் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டத்தின் கீழ் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு. “துணை ஆய்வாளர்” பதவிக்கான முழு மாதிரி தேர்வு, நாளை (17/12/2025) காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. எனவே தேர்விற்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
News December 16, 2025
தருமபுரி: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தருமபுரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <


