News August 26, 2024

தருமபுரி அருகே மூதாட்டியிடம் தகராறு செய்த இளைஞர்கள்

image

மாரண்டஅள்ளி அடுத்த கரிக்குட்டனூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (60), நேற்று மலையடிவாரத்தில் ஆடு மேய்க்கும் போது ஆண்டிமுத்து (29), மருதன் (24) ஆகியோர் போதையில் மூதாட்டியை மது அருந்த அழைத்துள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே அவர்கள் இருவரும் அவரிடம் தகராறு செய்துள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அருகில் வந்தவர்கள் மூதாட்டியை மீட்டுள்ளனர். புகாரின் பேரில் இவர்மீது மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News

News December 17, 2025

தருமபுரி: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

image

தருமபுரி மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை, விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 17, 2025

தருமபுரி: பூட்டை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை!

image

தருமபுரி: திம்மம்பட்டியைச் சேர்ந்த முரளி (35), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது, 5 பவுன் நகை திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ரனர்.

News December 17, 2025

தருமபுரி: பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது போக்சோ!

image

தருமபுரி: நல்லம் பள்ளி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு மாணவிக்கு, ஆசிரியர் மணிவண்ணன் சில நாட்களுக்கு முன்னர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் புகார் அளிக்காமல் இருக்க ரூ.10 லட்சம் தருவதாகவும் பேரம் பேசியுள்ளார். இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர், மணிவண்ணன் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் நேற்று போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!