News August 17, 2024

தருமபுரி அரசு கல்லூரியில் பொது கலந்தாய்வு

image

தர்மபுரி அரசு கல்லூரி முதல்வர் கண்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 2024 நடப்பு கல்வி ஆண்டில் முதுநிலை பட்ட மேற்படிப்புக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 19 காலை 10 மணிக்கு கல்லூரி கலை அரங்கில் நடைபெறுகிறது. இதில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் தரவரிசைப்படி ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News December 6, 2025

தருமபுரி:30டன் ரேஷன் அரிசி கடத்தல் -ஒருவர் கைது!

image

பென்னாகரம் பிரதான சாலையில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியில் ர. (TN34V4487) சோதனை செய்தபோது பொக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பொது விநியோகதிட்ட ரேஷன் அரிசி 600 முட்டைகளில் மொத்தமாக 30,000 கிலோ (30டன்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த வாகனம் மற்றும் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை கைப்பற்றி சாமிசெட்டிப்பட்டி சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News December 6, 2025

தருமபுரி:போலி மருத்துவர் கைது!

image

தருமபுரி மருத்துவம் & ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் சாந்தி தலைமையில், போலி மருத்துவர்கள் ஒழிப்புக் குழுவினர் அதியமான்கோட்டையில் கிளினிக் வைத்து நடத்திவந்த ஒரு வீட்டில் நேற்று ஆய்வு செய்தனர்.அங்கு கணேசன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.மருத்துவக் குழுவினர் விசாரணையில், அவர் பிளஸ் 2 வரை படித்த நிலையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததை எடுத்து காவலர்கள் அவரை கைது செய்தனர்.

News December 6, 2025

தருமபுரி:அரசு வழக்கறிஞர் (கல்பனா) லஞ்சம் வாங்கி கைது !

image

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வீரய்யன் என்பவரின் மகளுக்கு பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமி வழக்கு அவரது தந்தையிடம் ரூபாய் 10,000 லஞ்சம் வாங்கிய தர்மபுரி போக்ஸோ நீதிமன்ற அரசு வக்கீல் கல்பனா என்பரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று டிச-5 கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை.

error: Content is protected !!