News March 22, 2024
தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி

தருமபுரி மக்களவை தொகுதியில் செளமியா அன்புமணி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தருமபுரி பாமக வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரசாங்கம் சற்றுமுன் மாற்றப்பட்டார். பாஜக என்டிஏ கூட்டணியில் பாமக மாநிலம் முழுவதும் 10 தொகுதிகளில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 19, 2025
பாப்பாரப்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

பாப்பாரப்பட்டி சொரக்காபட்டியைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் 48, குடிப்பழக்கம் உடையவர். இதில் ஏற்பட்ட தகராறில் மனைவி சத்யா தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். மனைவியை மீண்டும் அழைத்தபோது வர மறுத்துவிட்டதால மனமுடைந்த அவர் கடந்த 8ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முன்றார். அவரை மீட்டு தர்மபுரி ஜிஹெச்சில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் நேற்று உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News April 18, 2025
தீராத நோய்கள் தீர்க்கும் தீர்த்த மலை கோயில்

ராமரால் உருவாக்கப்பட்ட சிவலிங்கங்கள் தமிழநாட்டில் இரண்டு உள்ளன. ஒன்று ராமேஸ்வரம் மற்றொன்று தர்மபுரி தீர்த்தகிரி மலை கோயில். ராமர் அயோத்தி திரும்பிய போது சிவனுக்கு பூஜை செய்ய தனது அம்பை எய்து உருவாக்கிய தீர்த்தம் தான்இங்குள்ள ராமர் தீர்த்தம். இதனாலேயே மூலவர் தீர்த்தகிரிஸ்வரர் என பெயர் பெற்றுள்ளார். இங்குள்ள தீர்த்ததில் நீராடினால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News April 18, 2025
சமையல் உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தர்மபுரியில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 21 – முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கணவரை இழந்த, கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு படித்த, தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ மாநகராட்சி/ நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். <