News August 14, 2024
தருமபுரியில் சுதந்திர விழாவையொட்டி ஒத்திகை நிகழ்ச்சி

தருமபுரியில் நாளை மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையேற்று தேசிய கொடி ஏற்றவுள்ளார். பின்னர் பல்வேறு துறைகளில் அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் மக்களுக்கு பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்நிலையில் தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News December 10, 2025
பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை

தர்மபுரி; அரசு, அரசுஉதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்ட(மி.பி.வ) / சீர்மரபினர் (சீ.ம) பிரிவைச் சார்ந்த மாணவ/மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Postmatric Scholarship) திட்டம்செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
News December 10, 2025
“கபீர் புரஸ்கார்” விருது பெற விண்ணப்பிக்கலாம்

மத நல்லிணக்கம், சமுதாய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் “கபீர் புரஸ்கார்” விருது பெற விண்ணப்பிக்கலாம், மேலும் விவரங்களுக்கு https//awards/tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் – என ஆட்சியர் ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (டிச.10) தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
உரிமை கோரப்படாத நிதி சொத்துக்கள் ஒப்படைப்பு முகாம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12.12.2025 அன்று காலை 10.00 மணிக்கு “நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாம்” மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.அனைத்து வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் இதர நிதி துறைகளின் கிளைகளில் 01.10.2025 முதல் 31.12.2025 வரை தொடர்ச்சியாக நடத்தப்படும்.


