News September 14, 2024
தருமபுரியில் இலவச தேய்ப்பு பெட்டி

தருமபுரியில் BC, MBC வகுனப்பினர்களின் பொருளாதர மேம்பாட்டிற்காக இலவச LPG தேய்ப்பு பெட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற சலவை தொழிலை செய்யும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். LPG தேய்ப்பு பெட்டி பெறம் விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் BC, MBC (ம) சீர்மரபினர் அலுவலகத்தில் வழங்கலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் கூறியுள்ளார்.
Similar News
News October 18, 2025
தருமபுரி மாணவர்கள் கவனத்திற்கு

தருமபுரி மாவட்டத்தில் புதியதாக துவங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் காரிமங்கலத்தில் 2025-ஆம் கல்வியாண்டிற்கான நேரடி சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தொழிற்பயிற்சி நிலையமானது கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படும். சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்
News October 18, 2025
தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.17) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. திரு. சூர்யா தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக் கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்
News October 17, 2025
தருமபுரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தருமபுரி மாவட்டம், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான நேரடி சேர்க்கை 15.10.2025 முதல் 14.11.2025 வரை நடைபெறும். இக்கல்லூரியில் வழங்கப்படும். மேலும், 04342-233600 மற்றும் 7418844106 மாவட்ட எண்ணகளை தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.