News August 19, 2024
தருமபுரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தருமபுரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தென்கரைக்கோட்டை, கோபிநாதம்பட்டி, கூட்டோடு, பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
Similar News
News November 7, 2025
தருமபுரி: பால் விலை உயரப்போகிறது!

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநிலக்குழு கூட்டம், தருமபுரி முத்து இல்லத்தில் மாநில துணைத்தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பருத்தி கொட்டை, புண்ணாக்கு மற்றும் கலப்பு தீவனம் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதால் பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு, 45, எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு, 60 ரூபாய் என விலை உயர்த்தி வழங்க வேண்டும். பின் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்றினர்.
News November 7, 2025
தருமபுரி: சொந்த ஊரிலே அரசு வேலை!

சமூகநலத்துறையின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) – என்ற திட்டத்திற்கு பல்நோக்கு உதவியாளர்(24×7) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவத்தினை dharmapuri.nic.in தளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.17. ஷேர் பண்ணுங்க!
News November 7, 2025
தொப்பூர்: லாரி மோதியதில் உடல் நசுங்கி ஒருவர் பலி!

நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் கட்டமேடு அடுத்துள்ள கணவாய் பகுதியில் (நவ.5) காலை 12 மணி அளவில் கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு பணியில் இருப்பவரின் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


