News August 14, 2024

தருமபுரியில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணிவரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. அண்மையில் பெய்த மழையால், குடியிருப்பு பகுதிகளில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இன்று இரவு கனமழை பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது.

Similar News

News November 7, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவம்பர் 2025 மாதத்திற்கான கூட்டம் நடைபெறவுள்ளது. இன்று நவ.07-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

News November 6, 2025

மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை

image

தருமபுரி மாவட்டம், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி கலையரங்கில் ” மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ் தலைமையில் இன்று (நவ.6) நடைபெற்றது. மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர்களான நீங்கள் பெற்றுக்கொள்ளுகின்ற கருத்துகள் அனைத்தும் உங்கள் வாழ்வில் தெரிவித்தார்.

News November 6, 2025

தருமபுரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று (நவ.06) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக் கொள்ள, தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்

error: Content is protected !!