News February 15, 2025
தருமபுரிக்கு புதிய தொழில் பூங்கா (SIPCOT)

தர்மபுரி பிப்15 மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஆட்சியர் சதீஷ்குமார் தெரிவித்தாவது, தருமபுரி மாவட்டத்தின் அதகபாடி பகுதியில், 1,733 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்கா (SIPCOT) அமைய உள்ளது. பல முன்னணி நிறுவனங்களான OLA ATHER ENERGY, TVS, TITAN, e-MAN AUTOMOTIVE அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளன. இதனால் இம்மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
Similar News
News November 25, 2025
தருமபுரி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

தருமபுரி மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 25, 2025
பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சாரம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சார பேரணியை, ஆட்சித் தலைவர் சதீஷ் மற்றும்
தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி MP ஆகியோர் இன்று (நவ.25) துவக்கி வைத்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். உடன் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News November 25, 2025
தருமபுரி வழியாக செல்லும் ரயில்கள் இன்று ரத்து

பெங்களூர் எஸ்வந்த்பூர் மெஜஸ்டிக் வழித்தடத்தில் இருந்து பானாச்வடி, கார்மிலாரம், ஓசூர், தர்மபுரி செல்லும் அனைத்து ரயில்களும் 25/11/2025 இன்று ஒரு நாள் மட்டும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் Kr புரம், ஜோலார்பேட்டை, சேலம் வழியாக செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


