News August 26, 2024

தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த மக்கள்

image

தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதி. இங்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், நேற்று மாலை கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து விளையாடி மகிழ்ந்தனர்.

Similar News

News December 9, 2025

மயிலாடுதுறை: மானியத்துடன் கடன் உதவி; ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்திக்கொள்ள தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் கீழ் ரூ.10 லட்சத்தில் 25% அல்லது 2 லட்சம் மானியத்துடன் தொழில் கடன் பெற பெண்கள் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம் என ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

மயிலாடுதுறையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாகை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் காளிதாஸ் தலைமையில் நாளை(டிச.11) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம். இதேபோல ஒவ்வொரு மாதமும் 2வது புதன்கிழமை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) ரேணுகா தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

மயிலாடுதுறையில் 22 பேர் கைது

image

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊக்குனர்கள் உள்ளிட்ட ஊராட்சி துறை பணியாளர்கள் அரசுக்கு 11 அம்ச கோரிக்கை வைத்தனர். அதனையெடுத்து அதற்கு அரசானை வெளியிட சென்னையில் நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு கொள்ளிடத்தில் இருந்து புறப்பட்ட தயாராக இருந்த 22 பேரை நேற்று முன்தினம் கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!