News August 27, 2024
தம்பியை கத்தியால் குத்திய அண்ணன்

அறந்தாங்கி கண்டிச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவமுருகையா (65). இவரது சகோதரர் சிவரத்தினம் (52). இருவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று சிவமுருகையா பொது இடத்தை உழுததை கண்ட சிவரத்தினம் தடுத்துள்ளார். அப்போது, சிவமுருகையா, அவரது மருமகன் பசுபதி ஆகிய இருவரும் சேர்ந்து சிவரத்தினத்தை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 24, 2025
பொன்னமராவதி: சோழீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேக விழா

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் கார்த்திகை திங்கள் சோம வாரத்தை முன்னிட்டு, இன்று 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக சிவாச்சாரியர்கள் வழிநடத்த சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று, பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட 108 சங்குகளில் உள்ள புனிதநீர் மூலம் சோழீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
News November 24, 2025
புதுக்கோட்டை: தேர்வு கிடையாது… ரயில்வே வேலை

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 1785
3. வயது: 24க்குள் (SC/ST-29,OBC-27)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: 12th, ITI
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News November 24, 2025
புதுகை: டிகிரி போதும்.. அரசு வேலை

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 134
3. வயது: 30 (SC/ST-35,OBC-33)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: டிகிரி
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.


