News August 3, 2024
தமிழ் யூடியூபர் இர்பானுக்கு அபராதம்

ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதாக தமிழ் யூடியூபர் இர்பானுக்கு சென்னை போக்குவரத்து போலீசார் ரூ.1,000 அபராதம் விதித்துள்ளனர். மேலும், சரியான நம்பர் பிளேட் இல்லாததற்கும் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். சமீபத்தில், நடிகர் பிரசாந்தும் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதற்காக, ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. சாலை விதிகளை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டுமென போக்குவரத்து போலீசார் கவனித்து வருகின்றனர்.
Similar News
News November 23, 2025
சென்னை: உடல் நசுங்கி கொடூர பலி!

சென்னை: தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் அப்துல் வாஹித் (38). நேற்று(நவ.22) இவர் ஆட்டோவில் பள்ளி மாணவி ஒருவரை சவாரியாக ஏற்றிக் கொண்டு கீழ்ப்பாக்கம் – மேடவாக்கம் டேங்க் சாலையில் சென்று கொண்டிருந்தார். கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் வளாகத்தின் உள்ளே பனைமரம் தானாக ஆட்டோவின் முன்பகுதி மேல் விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
News November 23, 2025
வண்டலூர் பூங்காவில் சிங்கம் உயிரிழப்பு

வண்டலூர்: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த புவனா என்ற 20 வயது பெண் சிங்கம் உடல்நலக்குறைவு, வயதுமூப்பு காரணமாக பல உறுப்புகள் செயலிழந்ததால் உயிரிழந்தது. பூங்காவில் மொத்தம் 7 சிங்கங்கள் பராமரிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த சிங்கம் உயிரிழந்துள்ளது.