News April 13, 2025

தமிழ் புத்தாண்டு- செம்மலை முருகன் கோயில் போங்க

image

செங்கல்பட்டு மாவட்டம் செம்மலையில் முருகன் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். SHARE பண்ணுங்க.

Similar News

News December 19, 2025

செங்கல்பட்டு: 510 கிலோ கஞ்சா அழிப்பு!

image

ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 510 கிலோ கஞ்சா, நீதிமன்ற உத்தரவுப்படி செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள தனியார் ஆலை இயந்திரத்தில் கொட்டி அழிக்கப்பட்டது. கூடுதல் கமிஷனர் பவானீஸ்வரி முன்னிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை ரூ.3 கோடி மதிப்பிலான 2,892 கிலோ கஞ்சா எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 19, 2025

செங்கல்பட்டு: வேலை செய்த வீட்டில் பெண் கைவரிசை!

image

தாம்பரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சுகுமார் (71) என்பவரது வீட்டில், திருவள்ளூரைச் சேர்ந்த லட்சுமி (50) என்பவர் சமையல் வேலைக்குச் சேர்ந்தார். ஒரு மாதத்திலேயே அவர் திடீரென வேலைக்கு வராமல் தலைமறைவானார். சந்தேகமடைந்த சுகுமார் பீரோவைச் சோதித்தபோது, அதிலிருந்த நகை மற்றும் பணம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 19, 2025

செங்கல்பட்டு: மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி!

image

தாம்பரம் அடுத்த முடிச்சூரைச் சேர்ந்த சீனி முருகன் (45) என்ற பெயிண்டர், சேலையூர் அகரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தார். டிச-17 பணியின் போது அவர் ஏணியைத் தூக்கிச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்சாரக் கம்பியில் ஏணி உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சீனி முருகன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!