News August 14, 2024
தமிழ் புதல்வன் திட்டத்தின் துவக்க விழா

தமிழ்நாடு முதலமைச்சரால் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் கோவையில் தொடங்கி வைக்கப்பட்டதை அடுத்து, திருவாரூர் மாவட்டம், மஞ்சக்குடியில் தமிழ்புதல்வன் திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கான மின்னனு அட்டையினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கே.கலைவாணன் இன்று வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Similar News
News October 28, 2025
திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News October 27, 2025
திருவாரூர் மக்களே இதை தெரிஞ்சுக்கோங்க!

திருவாரூர் மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு TN-ALERT என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கி நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
News October 27, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்காக, தரமான உழவர் நலச்சேவைகளை வழங்குவதற்காக உழவர் நல சேவை மையங்கள் அமைத்து. இம்மையங்கள் வாயிலாக விதைகள், உரங்கள், இடுபொருட்கள் விற்பனை, நவீன தொழில்நுட்ப ஆலோசனைகள், பூச்சி-நோய் மேலாண்மை, சேவைகள் வழங்கப்படும். மேலும் இம்மையம் அமைக்க 30% மானியம் (அ) ரூ.3 முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.


