News August 9, 2024
தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி பற்று அட்டை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி, கள்ளிமந்தையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டையினை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, பழனி வருவாய் கோட்டாட்சியர் சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.
Similar News
News November 20, 2025
திண்டுக்கல்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

திண்டுக்கல் மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க<
News November 20, 2025
திண்டுக்கல்: பல லட்சம் இழந்த இளம்பெண் விபரீத முடிவு!

திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி அருகே கோபாலபுரத்தில் வசித்து வந்த லாவண்யா (25) சமூக வலைதளங்களில் வந்த போலி வேலைவாய்ப்பு விளம்பரத்தை நம்பி மோசடி கும்பலுக்கு பல தவணைகளில் ரூ.5 லட்சம் ஆன்லைனில் செலுத்தியுள்ளார். இந்நிலையில், வேலை கிடைக்காததாலும் பணம் ஏமாற்றப்பட்டதாலும் மனமுடைந்து நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News November 20, 2025
திண்டுக்கல்: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.ஷேர் செய்யுங்க.


