News August 9, 2024
‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

தமிழக அரசின் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில், உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் பகுதியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது. இதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ATM கார்டு வழங்கி சிறப்பித்தார்.
Similar News
News November 20, 2025
காஞ்சிபுரம்: மின் தாக்கி துடிதுடித்து பலி!

ஸ்ரீபெரும்புதூர்: உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் உதய்பான் போசாமி(45). லாரி கிளீனரான இவரும், டிரைவரும் பால்நல்லூரில் வல்லம் வடகால் சிப்காட் சாலையில் தொழிற்சாலைக்குச் செல்ல நேற்று(நவ.19) காலை காத்திருந்தனர். அப்போது, கீழே இறந்ங்கி கண்டெய்னரின் பின் பகுதியை உதய்பான் தொட்ட போது, திடீரென மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 19, 2025
காஞ்சி: மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி!

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி டிசம்பர் 01ஆம் தேதி அன்றும், தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி டிசம்பர் 4ஆம் தேதியன்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம், பி.டி.வி.எஸ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள இந்த போட்டியில், மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 19, 2025
காஞ்சியில் மின்தடை அறிவிப்பு!

தாமல் & முசரவாக்கம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (நவ.20) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பாலுசெட்டிசத்திரம், தாமல், வதியூர், ஒழுக்கோல்பட்டு, கிளார், களத்தூர், அவளூர், பெரும்புலிபாக்கம், பொய்மைநல்லூர், ஜாகீர் தண்டலம், பனப்பாக்கம், முசாவாக்கம், முத்துவேடு, பெரும்பாக்கம், திருப்புட்குழி ஆகிய பகுதியில் காலை 9 மணி-மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.


