News August 10, 2024

“தமிழ் செம்மல்” விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் “தமிழ்ச்செம்மல்” விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பெறுகின்றன. தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் விண்ணப்பப்படிவங்கள் என்ற தலைப்பில் உள்ள இணைப்பின் மூலமாகப் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News September 18, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விபரப்பட்டியல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலிசாரின் விவரங்கள் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், மணல்மேடு,, சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு உள்ளிட்ட இடங்களில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணிவரை ரோந்து பணி மேற்கொள்ளும் போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கை குறித்து புகார் தெரிவிக்கலாம்.

News September 17, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில், வாக்குச்சாவடி மையங்கள் மறு சீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

News September 17, 2025

சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

image

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டம் சோதியக்குடி கிராமத்தில் சாலை சேதம் அடைந்துள்ள நிலையில், புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

error: Content is protected !!