News November 14, 2024
தமிழ் கல்வெட்டுக்கள் மீண்டும் மைசூருக்கு மாற்ற முயற்சி?
பல ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கொண்டுவரப்பட்ட தமிழக கல்வெட்டுகளை மீண்டும் மைசூருக்கு மாற்ற திரை மறைவு பணிகள் துவங்கிவிட்டதாக மதுரை எம்.பி சு.வெ., குற்றம் சாட்டியுள்ளார். இதனை தடுக்க தமிழக அரசு அனைத்து முயற்சியும் செய்ய வேண்டும் எனவும், சரஸ்வதி நாகரிகம் என்றால் கோடிகளை அள்ளித்தருவார்கள். தமிழ் நாகரிகம் என்றால் கட்டிடம் பழசு என காரணம் கூறுவார்கள் எனவும் விமர்சனம்.
Similar News
News November 19, 2024
மதுரையில் 420 பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம்
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.23 அன்று உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். அதன்படி மாவட்டத்தில் உள்ள 420 கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளை குறித்து விவாதிக்கப்பட உள்ளதால் கிராம மக்கள் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
News November 19, 2024
மதுரையில் 10,000 பேருக்கு பிரியாணி விருந்து
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நவ.27ல் பிறந்த நாள் விழா கொண்டாடுகிறார்.அவரின் 47ஆம் பிறந்த நாளை முன்னிட்டு மேலூரில் 10,000 பேருக்கு கோழி லெக்பீஸ், மட்டன் பிரியாணி விருந்து நவ.25ல் நடைபெற உள்ளது. அமைச்சர் மூர்த்தி இதனை தொடங்கி வைக்கிறார். இதற்காக பந்தல் கால் அமைக்கும் பணியினை தலைமை கழக செயற்குழு உறுப்பினர் கரு.தியாகராஜன், நகர் மன்ற தலைவருமான முகமது யாசின் இன்று துவக்கி வைத்தனர்.
News November 19, 2024
மதுரையில் 23 ஆட்டோக்கள் பறிமுதல்
மதுரை மாநகரில் மோட்டார் வாகன போக்குவரத்து துறையுடன் இணைந்து மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் தகுதிச் சான்று மற்றும் உரிமம் இல்லாத 23 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பிற விதிமீறலுக்காக 50 ஆட்டோக்கள் மீது போக்குவரத்து காவல்துறை சார்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.