News August 7, 2024
தமிழ்ப் புதல்வன் திட்டம் குறித்து ஆலோசனை

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் இன்று முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படவுள்ள தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். இத்திட்டத்தில் 6261 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், 9ம் தேதி முதல் 1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News December 5, 2025
குமரி: விருதுக்குவிண்ணப்பிக்க கடைசி தேதி.. கலெக்டர் அறிவிப்பு

குமரி ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், 2025ம் ஆண்டுக்கு தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய நபரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் தங்களது விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் இம்மாதம் 18-ம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று பதில் கூறியுள்ளார்.
News December 5, 2025
குமரி: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

குமரி மக்களே நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 5, 2025
குமரி: நாளை எங்கெல்லாம் மின்தடை?

குமரி மாவட்ட துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நாளை (டிச.6) நடக்கிறது. எனவே, காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, மாலைக்கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, மலையடி. பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, விளவங்கோடு, கழுவன் திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய பகுதி மற்றும் கிராம பகுதியிலும் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE


