News May 15, 2024
தமிழ்நாடு பசுமை விருது சாம்பியன் தேர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு பசுமை விருது சாம்பியன் தேர்வு தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பசுமை விருது சாம்பியன் வழங்குவது குறித்த கருத்துக்களை ஆட்சியர் வழங்கினார்.
Similar News
News November 18, 2025
அரக்கோணம்: போதையில் தகராறு செய்த இருவர் கைது

அரக்கோணம்: திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்(38). இவர், நேற்று முன் தினம் தக்கோலத்தை அடுத்த நகரிக்குப்பம் பகுதியில் உள்ள உணவகத்திற்கு சாப்பிட வந்த போது, அவரிடம் போதையில் இரண்டு பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த போலீஸ் புகாரில், பாஸ்கரன்(38), சங்கர்(28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை: விபத்தில் துடிதுடித்து பலி!

ராணிப்பேட்டை: பாப்பாக்கம் அடுத்த நெடும்புலி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(60). விவசாய கூலித் தொழிலாளியான இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன்(67). இருவரும் நேற்று(நவ.17) மாலை ஓச்சேரி செல்வதற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதே வழியாக வந்த கல்லூரி பஸ் மோதியதில், கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.