News March 29, 2024
தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திருவாரூர், மன்னார்குடியில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும்
என்.செந்தில்குமார் இன்று மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு அரசியல் இயக்கங்கள், சமூக அமைப்புகளிள் தலைவர்கள், விவசாயிகளை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். மன்னார்குடி உழவர் சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Similar News
News October 16, 2025
திருவாரூர்: சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதும் அரசு அனுமதி பெறாமல் நடத்தப்படும் பட்டாசு கடைகள் மற்றும் தயாரிப்பு கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், வலங்கைமான் அருகே மாஞ்சேரியைச் சேர்ந்த ராஜபாண்டியன் (35) என்பவர் வீட்டில் அனுமதி பெறாமல் பட்டாசு தயாரித்து வந்தது தெரியவந்ததையடுத்து, போலீசார் 800 கிலோ பட்டாசுகள், 3 கிலோ வெடி மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
News October 15, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (அக்.15) இரவு முதல் நாளை (அக்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News October 15, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்!

தமிழகத்தில் நாளை (அக்.16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று (அக்.15) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!