News April 15, 2025
தமிழ்நாடு இளைஞர்களுக்கு சிங்கப்பூர் அரசு விருது

கடந்த வாரம் சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல குழந்தைகள் தீயில் சிக்கி கொண்டனர். அப்போது அருகில் பணியில் இருந்த லால்குடி, கல்லகம் ஊராட்சியை சேர்ந்த சரண்ராஜ் உள்பட 4 தமிழக இளைஞர்கள் தீயணைப்பு வாகனம் வரும் முன் துரிதமாக செயல்பட்டு 16 குழந்தைகள் உட்பட 22 பேரை காப்பாற்றியுள்ளனர். இவர்களின் வீர தீர செயலை பாராட்டி சிங்கப்பூர் அரசாங்கம் ‘Friends of ACE’ எனும் விருதினை வழங்கி பாராட்டியது.
Similar News
News December 2, 2025
திருச்சி: மழைநீரில் பயணிகளுடன் சிக்கிய ஆம்னி வேன்

அரியமங்கலம் மேம்பாலத்தின்கீழ் உள்ள பாதையில் 4 நாட்களாக தேங்கி மழைநீர் மாநகராட்சியின் நிர்வாகத்தால் வெளியேற்றபடாததால், பயணிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி வேன் பள்ளத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் இன்றி தப்பித்தனர். அதேநேரம் தண்ணீரை வெளியேற்ற திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News December 2, 2025
திருச்சி: மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு

தொட்டியம் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவரும், திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது நர்சிங் கல்லூரி மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்த புகாரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் ஹரிஷை தேடி வருகின்றனர்.
News December 2, 2025
திருச்சி: அதிரடி காட்டிய போலீசார்

போலியான இணையதளம் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி கே.கே நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.48 லட்சம் ஏமாற்றியது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, ஏமாற்றிய நபரிடம் இருந்து பணத்தை மீட்டு, மாநகர காவல் ஆணையர் காமினி பாதிக்கப்பட்டவரிடம் மீண்டும் பணத்தை ஒப்படைத்தார்.


