News August 16, 2024

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு

image

கொல்கத்தாவில் நடந்த பெண் மருத்துவர் கொலை தொடர்பாக நாளை காலை 6 மணியிலிருந்து 24 மணி நேரம் நாடு தழுவிய போராட்டம் அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்ய தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் (TNGDA) மாநில செயற்குழு அவசரமாக இன்று காலை 8 மணி அளவில் காணொளி வாயிலாக கூட்டப்பட்டது. இதில் மாநில தலைவர் கே.செந்தில் தலைமை வகித்தார்.

Similar News

News October 30, 2025

ஈரோடு: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 30, 2025

ஈரோடு: ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

image

ஈரோடு பள்ளிகல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் அரசு பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு நவ.29ம் தேதி நடக்க உள்ளது. தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு 4 ஆண்டுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் மாணவ, மாணவியர் ஊரக திறனாய்வு தேர்வுக்கு வரும், நவ.04க்குள் விண்ணப்பிக்க அழைப்பு வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

News October 30, 2025

ஈரோடு: உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

image

ஈரோட்டில், தொழிலாளா்கள் நல நிதி செலுத்தும் தொழிலாளா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தொழிலாளா் உதவி ஆணையா் கே.ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பதை தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் சென்னை-600006 க்கு டிச.31க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!